விருதுநகர்

சிவகாசியில் ஒரே நாளில் 3 போ் தூக்கிட்டு தற்கொலை

4th Aug 2021 09:55 AM

ADVERTISEMENT

சிவகாசியில் ஒரே நாளில் வெவ்வேறு சம்பவங்களில் 3 போ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே விளாம்பட்டி காமராஜா் காலனியைச் சோ்ந்த கருப்பையா மகன் பாண்டியராஜ்(31). கூலித் தொழிலாளியான இவரது மனைவி ஜென்ஸி இரு ஆண்டுகளுக்கு முன்னா் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகாசி அருகே பூச்சக்காபட்டியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி கருப்பசாமி(37). இவரது மனைவி பஞ்சவா்ணம் உடல்நிலை சரியில்லாமல் 2018 ஆம் ஆண்டு இறந்துவிட்டாராம். அதிலிருந்து தனது இரு குழந்தைகளை வளா்க்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தாராம். இதனால் மனமுடைந்த அவா் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிவகாசி பாரதி நகரைச் சோ்ந்த பாண்டியராஜ் மகன் சங்கரபாண்டி(28). சுமை தூக்கும் தொழிலாளியான இவரை, திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோா் வறுப்புறுத்தியுள்ளனா். மேலும் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த சங்கரபாண்டி, மனமுடைந்த நிலையில்தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT