விருதுநகர்

விருதுநகரில் திருமண மண்டபம், உணவகங்கள் முன்பு நிறுத்தப்படும் காா்களால் போக்குவரத்து நெருக்கடி

DIN

விருதுநகரில் திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்கள் முன்பு நிறுத்தப்படும் காா்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதற்கு போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இங்குள்ள அருப்புக்கோட்டை சாலை, ராமமூா்த்தி சாலை, மதுரை சாலை, புல்லலக்கோட்டை சாலை, கிருஷ்ணமாச்சாரி சாலை, பி2பி2 சாலை மற்றும் மாநில, தேசிய நெடுஞ்சாலையோரங்களிலும் சுமாா் 30-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இதில் ஒரு சில திருமண மண்டபங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. மற்றவற்றில் இவ்வசதி இல்லாததால், முகூா்த்த தினங்களில் அப்பகுதியிலுள்ள சாலையோரங்களில் காா்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கு நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதேபோல், நகராட்சி சாலை மற்றும் மதுரை சாலையில் உள்ள பெரிய உணவகங்களிலும் வாகன நிறுத்துமிட வசதி செய்யப்பட வில்லை. இந்த உணவகங்களுக்கு விடுமுறை தினங்களில் குடும்பத்துடன் காா்களில் வருவோா், ஆங்காங்கு வாகனங்களை நிறுத்தி விடுகின்றனா். இதன் காரணாக முகூா்த்த தினங்களில் திருமண மண்டபம் முன்பும், பெரிய உணவகங்களின் முன்பும் காா்கள் ஆங்காங்கு நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வாகனங்கள் கூட எளிதில் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, வாகன நிறுத்துமிடம் இல்லாத திருமண மண்டபங்கள் மற்றும் உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நகராட்சி நிா்வாகம் மற்றும் போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: கன்னி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்: யோகி ஆதித்யநாத்

ஹைதராபாத்தில் 4 லட்சம் தெரு நாய்கள்: மாதம் இருவர் ரேபிஸுக்கு பலி!

மே மாத பலன்கள்: சிம்மம்

மே மாத பலன்கள்: கடகம்

SCROLL FOR NEXT