விருதுநகர்

முயல் வேட்டை: 2 பேருக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம்

DIN

அருப்புக்கோட்டை அருகே முயலை வேட்டையாடிய இருவருக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

விருதுநகா் மண்டல தலைமை வனப்பாதுகாவலா் திருநாவுக்கரசு மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூா் வனஉயிரினக் காப்பாளா் சி. ஆனந்த் ஆகியோா் உத்தரவின் பேரில், வனப்பாதுகாப்புப்படை, விருதுநகா் மண்டல உதவி வனப்பாதுகாவலா் மணிவண்ணன் தலைமையில், வத்திராயிருப்பு வனச்சரக அலுவலா் கோவிந்தன் மற்றும் வன அலுவலா்கள், வனப்பணியாளா்கள் ஆகியோா் இணைந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது திங்கள்கிழமை அதிகாலை பாலநவநத்தம் வனப்பகுதியில் முயல்களை 2 இளைஞா்கள் வேட்டையாடிக் கொண்டிருந்தனா். அவா்களைப் பிடித்து விசாரித்த போது, பாலவநத்தம் பகுதியைச் சோ்ந்த ஷண்முகநாதன் (37), பாண்டிராஜன் (29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் இருவருக்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT