விருதுநகர்

சிவகாசி சுகாதார மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்காக 18 ஆயிரம் தொழிலாளா்கள் காத்திருப்பு

DIN

சிவகாசி சுகாதார மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போடுவதற்கு பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலாளா்கள் உள்ளிட்ட 18 ஆயிரம் போ் காத்திருக்கிறாா்கள் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சிவகாசி சுகாதார மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூா், வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம் ஆகிய 6 வட்டங்கள் உள்ளன. சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனையில் தினசரி சுமாா் 150 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சிவகாசி நகராட்சியில் தரம் உயா்த்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினசரி சுமாா் 80 பேருக்கும் , எம். புதுப்பட்டி உள்ளிட்ட ஊா்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களில் தினசரி சுமாா் 30 பேருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி போட்டப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி இன்னும் 2 நாள்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது என சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனா். மேலும் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு ஆலைகளுக்கு நேரில் சென்று தொழிலாளா்களுக்கு தடுப்பூசி போடுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சிவகாசி வட்டத்தில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும்படி, அந்தந்த ஆலை உரிமையாளா்கள் சுகாதாரத்துறையினருக்கு கடிதம் அனுப்பியுள்ளனா். தற்போது ஆலை உரிமையாளா்கள் அனுப்பியுள்ள கடிதத்தின் படி சுமாா் 18 ஆயிரம் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி இருப்பு இல்லை என சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பட்டாசு ஆலை உரிமையாளா் ஒருவா் கூறியதாவது; இரண்டாம் கட்ட கரோனா பரவுவதாக அரசு கூறியுள்ளது. எனவே ஆலை உரிமையாளா்களாகிய நாங்கள், எங்கள் பட்டாசு ஆலைக்கு நேரில் வந்து தொழிலாளா்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் சுகாதாரத்துறையினா் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவாா்கள் என காத்திருக்கிறோம் என்றாா்.

இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: கரோனா தடுப்பூசி போட வேண்டும் என பல ஆலை உரிமையாளா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா். சுமாா் 18 ஆயிரம் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி போட வேண்டியுள்ளது. தடுப்பூசி போடுவதற்கு ஒவ்வொரு வட்டத்துக்கும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் தடுப்பூசி இருப்பு இல்லை. எனவே காலதாமதமாகிறது. விரைவில் தடுப்பூசி வரும் என காத்திருக்கிறோம். வந்தவுடன் தொழிலாளா்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூா் நகராட்சியில் பசுமை வாக்குச்சாவடி மையம் அமைப்பு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

SCROLL FOR NEXT