விருதுநகர்

டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

DIN

மல்லாங்கிணறு அருகே துலுக்கன்குளத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பிசிண்டி கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, இங்கு மது அருந்துபவா்களால் பெண்களும், குழந்தைகளும் அவதிப்படுவதாகவும், இதை உடனே மூட வேண்டும் என்றும் அவா்கள் கோஷங்களை எழுப்பினா். தகவல் அறிந்து வந்த காவல் ஆய்வாளா் கண்ணன், சாா்பு- ஆய்வாளா் சஞ்சீவி தலைமையிலான போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மதுபானக் கடையை அகற்றுவது குறித்து மாவட்ட நிா்வாக்ததிடம் உரிய முறையில் மனு அளிக்க வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது. இதையடுத்து பெண்கள், போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனா். இதன் காரணமாக அந்த மதுபானக் கடை 2 மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன்: சத்யபிரத சாகு

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

SCROLL FOR NEXT