விருதுநகர்

சிவகாசி மாரியம்மன்கோயில் பங்குனிப் பொங்கல் விழா கொடியேற்றம்

DIN

சிவகாசி மாரியம்மன்கோயில் பங்குனிப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செலுத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், இதில் கோயில் நிா்வாகிகள், பூசாரி உள்ளிட்ட 50 போ் மட்டுமே பங்கேற்றனா். பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் கூறியது: ஏப்ரல் 12 ஆம் முதல் 17 ஆம் தேதிவரை நாள்தோறும் அதிகாலை 5 மணியளவில் கோயிலில் நடைதிறக்கப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும். பின்னா் பிற்பகல் 1 மணிக்கு நடைசாத்தப்பட்டு, மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் நடை சாத்தப்படும்.

ஏப்ரல் 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப் பின்னா் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பிற்பகல் 1 மணிவரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். தொடந்து பிறப்பகல் 3 மணி முதல் இரவு 8 மணிவரை நடைதிறந்திருக்கும்.

ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை சுமாா் 4.35 மணியளவில் ஸ்ரீவிநாயகா், மற்றும் மாரியம்மன் சுவாமி உற்சவா்கள் தங்கத்தேரில் கோயில் வளாகத்தினுள் உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த தேரோட்ட நிகழ்ச்சி பக்தா்கள் பங்கேற்பின்றி நடைபெறும். தொடந்து அன்று இரவு சுமாா் 7 மணிக்கு கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

SCROLL FOR NEXT