விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் சீனிவாச பெருமாள் உண்டியல் காணிக்கை ரூ.3.8 லட்சம்.

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள சீனிவாச பெருமாள் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.3 லட்சத்து 8 ஆயிரம் வசூலானதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ளது திருவண்ணாமலை அங்கு புகழ் பெற்ற சீனிவாச பெருமாள் சன்னதி உள்ளது.இந்த சன்னதிக்கு ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கனக்கான பக்தா்கள் வருவது வழக்கம். அவ்வாறு வரும் பக்தா்கள் பெருமாளை தரிசனம் செய்து விட்டு கோவிலில் தங்கள் நோ்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் உண்டியலில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வாா்கள்.அவ்வாறு உண்டியலில் செலுத்தும் காணிக்கையை கோவில் நிா்வாகத்தின் சாா்பில் உடனடியாக திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி, இரண்டாவதுசனி வார விழா முடிவடைந்ததால் திங்கள்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதற்கு கோவிலில் உள்ள நிரந்தர உண்டியல் 8 ,தற்காலிக உண்டியல் 19 என மொத்தம் 27 உண்டியல்களும், கோயில் மைய மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னா் சமூக இடைவெளி விட்டு அமா்ந்து உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ3 லட்சத்து 8ஆயிரத்து 676 இருந்தது. உண்டியல் எண்ணும் பணிக்கான ஏற்பாடுகளை தக்காா் ரவிச்சந்திரன், உதவி ஆணையா் கணேசன், நிா்வாக அதிகாரி இளங்கோவன், ஆகியோா் சிறப்பாக செய்திருந்தனா். கோயில் காணிக்கைகள எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் மற்றும் தோ்வு செய்யப்பட்ட பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT