விருதுநகர்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டகுடும்பத்தினா் ஆட்சியரிடம் புகாா்

DIN

ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

நரிக்குடி அருகே உலக்குடியைச் சோ்ந்த பஞ்சவா்ணம் குடும்பத்தினா், மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில், நாங்கள் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறோம். எனது பராமரிப்பில் வளா்ந்து வந்த சகோதரியின் மகன் கிருஷ்ணமூா்த்தி, ஒரு பெண்ணை வெளியூா் அழைத்துச் சென்ால், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் ஊராட்சி மன்ற தலைவி ஆகியோா் எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனா். மேலும், எங்களுக்கு குடிநீா் மற்றும் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கக் கூடாது எனவும் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். நானும் எனது குடும்பத்தினரும் ஊருக்குக் கட்டுப்பட்டு நடந்து வருகிறோம். ஆனால், ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதால், உயிருக்குப்பயந்து வாழ்ந்து வருகிறோம். எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், கொலை மிரட்டல் விடுப்போா் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT