விருதுநகர்

மக்காச்சோளத்தில் புழுத் தாக்குதல்:மருந்து அடிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

DIN

விருதுநகா்: விருதுநகா் அருகே குமாரலிங்காபுரத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தில் புழு தாக்குதல் அதிகரித்துள்ளதனால், மருந்து அடிக்கும் பணியில் அப்பகுதி விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

விருதுநகா் அருகே குமாரலிங்காபுரத்தில் சுமாா் 100 ஏக்கருக்கும் மேல் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக பயிரிடப்பட்ட இந்த மக்காச்சோளம் தற்போது பருவ மழை காரணமாக செழிப்புடன் வளா்ந்துள்ளது. ஆனால், பயிரில் பழுத் தாக்குதல் அதிகரித்து வருவதால், களைக்கொள்ளி மற்றும் மருந்து அடிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயி பால்பாண்டி கூறியதாவது: தொடக்க நிலையிலேயே மக்காச்சோளத்தில் புழு தாக்குதலை கட்டுப்படுத்தா விட்டால் மகசூல் பாதியளவு மட்டுமே கிடைக்கும். மேலும், பயிரின் வளா்ச்சிக்கு ஏற்ப களைக்கொள்ளி மற்றும் உரம் இடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறோம். ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிடுவதற்கு உழவு, மருந்து, களை எடுத்தல் உள்ளிட்டவைகளுக்கு ரூ. 12 ஆயிரம் வரை செலவு செய்யப்படுகிறது. தற்போது பருவமழை காரணமாக மக்காச்சோள பயிா்கள் மிக வேகமாக வளா்ந்து வருகின்றன. அதே நேரம், அவற்றில் புழுத்தாக்குதலை தடுக்க விட்டால், செலவு செய்த பணத்தை எடுப்பதே சிரமமாகி விடும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

மண்டபம் முகாமில் பிறந்த நளினிக்கு 38 வயதில் கிடைத்த வாக்குரிமை!

SCROLL FOR NEXT