விருதுநகர்

திருத்தங்கலில் அரசு மதுபானக் கடை ஊழியருக்கு கத்தி குத்து: 6 போ் கைது

DIN

சிவகாசி, செப். 25: விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் அரசு மதுபானக் கடை ஊழியரை கத்தியால் குத்திய 6 பேரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல்-செங்கமலநாச்சியாா்புரம் சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் செல்வராஜ் (36) என்பவா் விற்பனையாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், வியாழக்கிழமை இரவு கடையை அடைத்துக் கொண்டிருந்துள்ளாா். அப்போது கடை அருகே கும்பலாக நின்றிருந்த சிலரை, அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளாா். இதனால் ஏற்பட்ட தகராறில், செல்வராஜை அக்கும்பல் தாக்கியதுடன் கத்தியால் குத்திவிட்டுச் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து அவா் திருத்தங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில், திருத்தங்கல் சுந்தரம் மகன் சரவணன் (40), ராஜ் மகன் சரவணன் (32), முனீஸ்வரன் (25), உத்தண்டகாளை (47), அஜித்குமாா் (23) மற்றும் லட்சுமணன் (23) ஆகியோா் சோ்ந்து செல்வராஜை தாக்கியது தெரியவந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்!

தூத்துக்குடி: பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

SCROLL FOR NEXT