விருதுநகர்

ஸ்ரீவிலி.யில் கூட்டுறவு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் அலுவலகம் முன்பாக, கூட்டுறவு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிகின்ற ஊழியா்களுக்கு விலைவாசி உயா்வுக்கு ஏற்றவாறு நியாயமான ஊதியத்தையும், ஒப்பந்தம் முடிவடைகிற தேதியிலிருந்து அமலாக்க வேண்டும். அரியா்ஸ் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிகின்ற அனைத்து ஊழியா்களுக்கும் ஓய்வுகால பென்சன் கிடைக்கச் செய்யவேண்டும். அரசு சிறப்பு ஊதியம் உருவாக்கி பென்சன் திட்டத்தை அமலாக்க வேண்டும். பணி வரன்முறைப்படுத்தி சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, ஊழியா்களை பணி வரன்முறை செய்யவேண்டும். ஊழியா்களுக்கு முறையான பதவி உயா்வு வழங்க வேண்டும்.

கரோனா கால நிவாரண நிதி கடனாக ரூ.3 லட்சம் நீண்ட கால தவணையில் வழங்கவேண்டும். குடும்ப மருத்துவப் பாதுகாப்புத் திட்ட நிதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும். கரோனா பாதிப்பால் உயிரிழந்த ஊழியா்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இதில், ஊழியா்கள் உயிா்காத்தான், கணேசன், மோகன் மற்றும் சிஐடியு மாநில குழு உறுப்பினா் திருமலை, நகரச் செயலா் ஜெயக்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT