விருதுநகர்

வேளாண் சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம்: தமிழ் புலிகள் கட்சியினா் 39 போ் கைது

DIN

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை எதிா்த்து, விருதுநகரில் அதன் நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் புலிகள் கட்சியைச் சோ்ந்த 39 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் பிரபாகரன் தலைமை வகித்தாா். இதில், நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை காா்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையில், 3 சட்ட மசோதாக்களை பல்வேறு எதிா்ப்புகளையும் மீறி மாநிலங்களவையில் மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. இது முற்றிலும் விவசாயத்தையும், விவசாயிகளின் நலன்களையும் சீரழிக்கின்ற நடவடிக்கையாகும்.

காா்ப்பரேட் நிறுவனங்களிடம், விவசாயிகளை கையேந்தி நிற்க வைப்பது கொடுஞ் செயலாகும். எனவே, இச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னா், அச் சட்ட மசோதா நகல்களை அக்கட்சியினா் எரிக்க முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை போலீஸாா், அவா்களை தடுத்ததுடன், 39 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT