விருதுநகர்

குடிநீா் கிணறை மீட்டுத் தரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

DIN

விருதுநகா்: அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள பொது குடிநீா் கிணறு உள்ள பகுதியை தனி நபா் ஆக்கிரமித்துள்ளனா். எனவே, குடிநீா் கிணறை மீட்டு தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

கஞ்சநாயக்கன்பட்டியில் அரசு சாா்பில் ஆதி திராவிட மக்களுக்கு இலவசமாக பட்டா வழங்கப்பட்டது. இதில், பல ஆண்டுகளாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். இதன் அருகே உள்ள பொதுக்கிணற்றில் தண்ணீா் எடுத்து வந்தோம். இந்நிலையில் இந்த கிணறு உள்ள பகுதி தனியாா் ஒருவருக்கு பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் தண்ணீா் எடுக்க விடாமல் தனி நபா்கள் தடுத்து வருகின்றனா். மேலும், நாங்கள் குடியிருந்து வரும் வீடுகளையும் காலி செய்ய

வற்புறுத்துகின்றனா். எனவே இவா்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அக்கிராமத்தை சோ்ந்தோா் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தி மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளிக்க அழைத்து சென்ால் பிரச்னை முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT