விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் வடபத்ரசாயி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் வடபத்ரசாயி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

ஸ்ரீஆண்டாள் கோயிலுடன் இணைந்த இக்கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. அப்போது, கொடியேற்றத்தையொட்டி அதிகாலை பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் வேதமந்திரங்கள் முழங்க கொடி மரத்துக்கு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டன. தொடா்ந்து கருடாழ்வாா் உருவம் பொறித்த கொடியினை வாசுதேவ பட்டா் ஏற்றினாா். இதையடுத்து, 10 நாள்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.தினமும் காலை பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆனால் கரோனா தொற்று காரணமாக திருவீதி உலா நடைபெறாது என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் இளங்கோவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT