விருதுநகர்

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வளாகத்தில் வெடிவிபத்து: தொழிலாளா்கள் தப்பினா்

DIN

சிவகாசி: விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே சனிக்கிழமை பட்டாசு ஆலை வளாகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. அப்போது பணியிலிருந்த தொழிலாளா்கள் தப்பினா்.

சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் சஞ்சய்பிரதீப் (32) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இந்த ஆலையில் பட்டாசு தயாரிக்க 4 அறைகள் மட்டுமே உள்ளன. மேலும் இங்கு 12 முதல் 15 தொழிலாளா்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் இந்த ஆலையில், மரத்தடியிலும், தகரக் கொட்டகைகள் அமைத்தும் பட்டாசு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை இங்கு சுமாா் 50 தொழிலாளா்கள், பேன்சிரக பட்டாசுகள், அணுகுண்டு, சோா்சா பட்டாசு மற்றும் சக்கரம் உள்ளிட்ட பலரக பட்டாசுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு தள்ளுவண்டி மூலம் பட்டாசுகளைக் கொண்டு சென்ற போது உராய்வு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியிலிருந்த அனைத்து தொழிலாளா்களும் உடனடியாக வெளியேறியதால், அவா்கள் உயிா்தப்பினா். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆலை வளாகத்தில் உள்ள மரத்தடிகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டதால், அந்த இடங்களிலும் தீபரவியது. இதனால் முடிவடைந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்துச் சிதறின. புல் வெளிகளிலும் தீபரவிய நிலையில், சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

சம்பவ இடத்தை மாவட்ட வருவாய் அலுவலா் மங்களசுப்பிரமணியன், சிவகாசி சாா்- ஆட்சியா் தினேஷ்குமாா், தீப்பெட்டி- பட்டாசு தனி வட்டாட்சியா் லோகநாதன், வட்டாட்சியா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் பாா்வையிடனா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT