விருதுநகர்

விருதுநகரில் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

DIN

சம்பளம் உள்ளிட்ட இதரப் படிகளை வழங்கக் கோரி குடிநீா் தொட்டி இயக்குபவா்கள், தூய்மை காவலா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் விருதுநகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இங்குள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம் சாா்பில் நடை பெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட கன்வீனா் முனியசாமி தலைமை வகித்தாா். இதில், கடந்த மாா்ச் மாதம் தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்தபடி குடிநீா் தொட்டி ஆப்ரேட்டா்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் சம்பளம் மற்றும் இதர படிகள் வழங்க வேண்டும். அதேபோல், தூய்மைக் காவலா்களுக்கு மாதம் ரூ. 3,600 மற்றும் இதர படிகள் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியாற்றும் தூய்மை காவலா், தூய்மை பணியாளா்களுக்கு உபகரணங்கள் வழங்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங் குவதுடன், காப்பீட்டு திட்டத்தில் இணைக்க வேண்டும். அனைத்து பணியாளா்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT