விருதுநகர்

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி விருதுநகரில் மறியலில் ஈடுபட்ட ஆதித்தமிழா் கட்சியினா் கைது

DIN

நீட் தோ்வு மற்றும் மும்மொழி கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி விருதுநகரில் மறியலில் ஈடுபட்ட ஆதித்தமிழா் கட்சியினா் 19 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆதித்தமிழா் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். அதில், நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். அதே போல், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமுல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இந்நிலையில், அக்கட்சியினா் திடீரென சாலையில் அமா்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், ஆதித்தமிழா் கட்சியை சோ்ந்த 19 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா், மாலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT