விருதுநகர்

அருப்புக்கோட்டையில் லஞ்சம் பெற்ற நிலஅளவைதுறை சர்வேயர் கைது

11th Sep 2020 07:39 PM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நிலஅளவைதுறை சர்வேயர் சிவசங்கரன் மற்றும் அலுவலக உதவியாளர் சூரிய நாராயணன் அகியோர் பெயர் மாற்றம் செய்வதற்காக 12,000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புதுறையினரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர். 

விருதுநகர் மாவட்டம, அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியை சேர்ந்தவர் ஆயிரன் என்பவரின் மகன் சின்னமுத்து விவசாயம் செய்து வரும் சின்னமுத்து அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட வெள்ளைகோட்டை சுப்பாராஜ் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன் புதிதாக வீடு ஒன்று வாங்கியுள்ளார். தான் புதிதாக வாங்கிய வீட்டிற்கு பெயர் மாற்றம் செய்வதற்காக நகராட்சி நிலஅளவையர் சிவசங்கரனிடம் மனு அளித்துள்ளார். 

பெயர் மாற்றம் செய்யவதற்காக நிலஅளவையர் சிவசங்கரன் சின்னமுத்துவிடம் ரூ12,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்னமுத்து லஞ்சஒழிப்புதுறையை நாடியுள்ளார். லஞ்ச ஒழிப்புதுறையினரின் ஆலோசணையின் பேரில் சின்னமுத்துவிடம் இராசயணம் தடவிய நோட்டுகளை கொடுத்து நிலஅளவையர் சிவசங்கரனிடம் வழங்க கூறியுள்ளனர். 

சின்னமுத்து கையில் பணத்துடன் நகராட்சி அலுவலகம் சென்று நிலஅளவையர் சிவசங்கரனிடம் பணத்தை வழங்கிய போது மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்புதுறையினர் சிவசங்கரன் மற்றும் அலுவலக உதவியாளர் சூரியநாராயணனை லஞ்சம் வாங்கிய போது கையும் களமாக பிடித்தனர் மூன்று மணிநேரம் சோதனைக்கு பின் இருவரையும் லஞ்ச ஒழிப்புதுறையினர் கைது செய்தனர்.

ADVERTISEMENT

Tags : virudhunagar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT