விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புளிய மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பலி

11th Sep 2020 08:11 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புளிய மரத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்தவர் வேல்பாண்டி வயது (18). சிவகாசி கல்லறைத் தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் வயது (18) இருவரும் நண்பர்கள். இருவரும் லவ்லி ஆப்செட்டில்பணிபுரிந்து வருகின்றனர். 

இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பில் குளித்துவிட்டு மாலையில் வீடு திரும்பும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளதைலாகுளம் பகுதியில் செல்லும்போது நிலைதடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியதில் வைரபிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். 

மேலும் ஒருவர் படுகாயமடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
 

ADVERTISEMENT

Tags : srivilliputhur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT