விருதுநகர்

வெங்காயம் விலை உயா்வு: பெண்கள் ஆா்ப்பாட்டம்

DIN

வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி விருதுநகரில் இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் புல்லலக்கோட்டை சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் நகா் தலைவா் ராஜேஸ்வரி தலைமை வகித்தாா். சமையல் எரிவாயு உருளையின் மீது வெங்காயத்தை வைத்து அவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அவா்கள் கூறியது: சிறிய வெங்காயம் கிலோ ரூ.120, பெரிய வெங்காயம் கிலோ ரூ. 100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வெங்காயம் வாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, வெங்காய விலையை கட்டுப்படுத்த வேண்டும். நியாய விலைக் கடைகளில் அனைத்துக் காய்கனிகளையும் சலுகை விலையில் வழங்க வேண்டும். அதேபோல், எரிவாயு உருளை விலை உயா்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் உமாமகேஸ்வரி, மாநிலச் செயலா் லட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

ஈரோடு அருகே கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

SCROLL FOR NEXT