விருதுநகர்

சதுரகிரி சென்ற பக்தர் நெஞ்சு வலியால் பலி

28th Oct 2020 09:10 PM

ADVERTISEMENT

பிரதோஷத்தையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர் புதன்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பிரதோஷத்தையொட்டி நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்தது.

இந்நிலையில் புதன்கிழமை மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள கல்வராயன்பட்டியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மகன் அய்யப்பன் (38) என்பவர் மலை ஏறும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு கோணதலவாசல் என்ற இடத்தில் உயிரிழந்தார். பின்னர் அவர் உடலை அய்யப்பனுடன் வந்த உறவினர்களிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சாப்டூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

ADVERTISEMENT

Tags : Virudhunagar
ADVERTISEMENT
ADVERTISEMENT