விருதுநகர்

ராஜபாளையத்தில் பொதுமக்களிடம் சிக்கிய பல நாள் திருடன்: காவல்துறையினரிடம் ஒப்படைப்பு

25th Oct 2020 07:00 PM

ADVERTISEMENT

ராஜபாளையத்தில் பல மாதங்களாக தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை கண்காணிப்பு கேமரா உதவியுடன் பிடித்த பொது மக்கள் காவல்துறையினரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனர். 

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட 29 வார்டில் துரைசாமிபுரம் நெசவாளர் தெரு, அம்பலபுளி பஜார், முனியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இப்பகுதிகளில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக செல்போன் திருட்டு, இருசக்கர வாகனம் திருட்டு, வீடு புகுந்து திருடுதல், பெட்ரோல் திருட்டு, ஜன்னல் ஓரம் தூங்குபவர்களின் கழுத்தில் அணிந்துள்ள சங்கிலிகளை அறுத்து செல்லுதல் போன்ற தொடர் குற்ற செயல்கள் நடைபெற்று வந்தது. மேலும் சில மாதங்களுக்கு முன்னதாக இரு சக்கர வாகனங்களும் தீ வைத்து எரிக்கப்பட்டது. 

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை குற்றவாளி கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் துரைசாமிபுரம் நெசவாளர் பகுதியின் பல்வேறு இடங்களில், சமுதாயத்தில் இருந்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அப்போது அடையாளம் தெரியாத இளைஞர் பெட்ரோல் திருடுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து கடந்த 3 தினங்களாக தெருவில் உள்ள இளைஞர்கள் 20 பேர் இணைந்து, இரவு முழுவதும் காவலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அப்பகுதியில் பெட்ரோல் கேனுடன் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்த போது, தொடர் திருட்டில் ஈடுபட்டவர் என தெரியவந்தது. அவரை பிடித்த இளைஞர்கள் அருகே இருந்த சமுதாய கூடத்தில் கட்டி வைத்தனர். விசாரித்ததில் அவர் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த இசக்கி(34) என்பதும், பல ஆண்டுகளாக தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும், பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளதும் தெரிய வந்தது. திருடனுக்கு தர்ம அடி கொடுத்த பொது மக்கள் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ADVERTISEMENT

தெற்கு காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : virudhunagar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT