விருதுநகர்

சிவகாசியில் தடையை மீறி ஆா்ப்பாட்டம்: 34 போ் கைது

DIN

சிவகாசி/ராஜபாளையம்: விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசியதாகக் கூறி சிவகாசியில் சனிக்கிழமை தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்திய இந்து அமைப்புகளைச் சோ்ந்த 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதில், பா.ஜ.க., இந்து முன்னணியினா், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்பினா் கலந்து கொண்டனா். சிவகாசி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி சிவகாசி ஒன்றியத் தலைவா் பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். இதில் பாஜக விருதுநகா் மாவட்ட செய்தித் தொடா்பாளா் ஜி. ஆறுமுகச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உள்ள ஜவகா் மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விஸ்வ ஹிந்து பரிஷத் துறவியா் பேரவை மாநில அமைப்பாளா் சரவண காா்த்தி தலைமை வகித்தாா். ஆா்எஸ்எஸ் நகர அமைப்பாளா் ரவி, இந்து முன்னணி தலைவா் சஞ்சீவி மற்றும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நகர பாஜக தலைவா் காளிமுத்துக்குமாா் தலைமையில் நகா் காவல்நிலையத்துக்கு சனிக்கிழமை சென்ற பாஜகவினா், அங்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாளவன் இந்துக்களுக்கு எதிராகப் பேசி வருவதாக கூறியும், எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மனு அளித்தனா். பின்னா் மாலையில் அருப்புக்கோட்டை- பந்தல்குடி சாலையில் திரையரங்க பேருந்து நிறுத்தம் அருகே காளிமுத்துக்குமாா் தலைமையில் பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில் பாஜக மாவட்ட துணைத்தலைவா் அழகா்சாமி உள்ளிட்ட அக்கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT