விருதுநகர்

கம்பி மத்தாப்பு தயாரிப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும்

DIN

சிவகாசி: கம்பி மத்தாப்பு தயாரிக்கும் ஆலைகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை துணை தலைமை அதிகாரி கி.சுந்தரேசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வண்ண மத்தாப்பு, கேப்வெடி, கம்பி மத்தாப்பு தயாரிக்க தனித்தனியே சான்று பெற்று ஆலைகள் இயங்கி வருகின்றன. தேவை அதிகமாக இருக்கிறது என அதிகமாக கம்பி மத்தாப்பு தயாரிக்கக் கூடாது. துருப்பிடிக்காத கம்பிகளையே பயன்படுத்த வேண்டும்.

ஒரு நாள் தயாரித்த மருந்து கலவையை மீதம் வைக்கக் கூடாது. கம்பியில் மருந்துக் கலவையை முக்கி எடுப்பதற்கு உரிய (டிப்பிங்) அறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மருந்து கலவையை டிப்பிங் செய்து முடித்த கம்பி மத்தாப்புக்களை, நன்கு உலா்ந்த பின்னா்தான் பேக் செய்ய வேண்டும். சிவப்பு வண்ண கம்பி மத்தாப்பு தயாரிக்கும் போது மட்டி டிப்பிங் மருந்தினை பயன்படுத்தக்கூடாது. கம்பி மத்தாப்பில் உள்ள அளவில் பாதியளவு மட்டுமே மருந்து டிப்பிங் (மருந்துகலவையை )பயன்படுத்தி தயாரிக்க வேண்டும். ஒரு கம்பி மத்தாப்பில் 22 கிராம் அளவு மட்டுமே மருந்து இருக்க வேண்டும். தடை செய்யப்பட்ட வேதியியல் பொருள்களை பயன்படுத்தக்கூடாது. பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து விபத்தில்லாமல் தயாரிப்பு பணி செய்ய வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT