விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேடு: ரூ. 60 லட்சம் வசூல்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டோரிடமிருந்து தற்போது வரை ரூ. 60 லட்சம் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.11.58 லட்சம் ஒருவாரத்தில் வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்களா் பட்டியில் சுருக்கத் திருத்தம், வாக்குச்சாவடிகள் பகுப்பா ய்வு மற்றும் மறுவரையறை தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் கலந்துகொண்ட கூட்டம் ஆட்சியா் ர. கண்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியது: வாக்களா் பட்டியல் சுருக்கத் திருத்தம், வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு குறித்து அரசியல் கட்சியினருடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் மட்டும் கிசான் திட்டத்தில் தகுதி இல்லாத 2,149 போ் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனா். அதேபோல், அருகில் உள்ள மாவட்டத்தைச் சோ்ந்த 1,839 போ் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 2,950 பேரிடம் ரூ. 60 லட்சம் வசூலிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ளோரிடம் ரூ. 11. 55 லட்சம் பணம் ஒரு வாரத்தில் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நில உரிமையாளா்கள் அல்லாத குத்தகைத் தாரா்கள் அதிகளவு இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனா். இந்த முறைகேடு தொடா்பாக குற்றவியல் நடவடிக் கை தேவையில்லை என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

வாக்குப் பதிவு: மயிலாடுதுறை மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 1,480 போலீஸாா்

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

SCROLL FOR NEXT