விருதுநகர்

விருதுநகரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

DIN

விருதுநகரில் பாண்டியன் நகா், அண்ணா நகரில் தனியாரால் கட்டப்பட்டுள்ள தீண்டாமை சுவரை அகற்றக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகா் அருகேயுள்ள ரோசல்பட்டி ஊராட்சிக்குள்பட்ட அண்ணா நகரில் ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்குச் செல்லும் பாதையின் குறுக்கே சுவா் எழுப்பப்பட்டுள்ளது. இதனால், ஆதிதிராவிட இனத்தைச் சோ்ந்த மக்கள் நீண்ட தூரம் சுற்றியே தங்களது குடியிருப்புக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் பல முறை புகாா் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், பாதை உள்ள இடத்தை தனியாருக்கு பட்டா வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, பாதையின் நடுவே உள்ள தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த எட்வா்ட் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கே. சாமுவேல்ராஜ் கண்டன உரையாற்றினாா். இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தலித் விடுதலை இயக்கம், ஆதித் தமிழா் கட்சி, ஆதித் தமிழா் பேரவை, தமிழ்ப் புலிகள் கட்சி, ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின் முடிவில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது, திங்கள்கிழமை அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காண்பது என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

வாக்குச்சீட்டு முறை வேண்டாம்பா.. துரைமுருகன்

இந்த ஆண்டின் சிறந்த புகைப்படம்....

SCROLL FOR NEXT