விருதுநகர்

ராஜபாளையம்: திருச்சிற்றம்பல குருநாத சுவாமி திருக்கோயிலில் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள்

30th Nov 2020 02:05 PM

ADVERTISEMENT

ராஜபாளையத்தில் கார்த்திகை சோமவார பூஜை மற்றும் மகாருத்ர யாகம் மற்றும் 108 சங்காபிஷேக சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள அருள்மிகு திருச்சிற்றம்பல குருநாத சுவாமி திருக்கோயிலில் மூன்றாவது கார்த்திகை சோமவார தினத்தை முன்னிட்டு மகா ருத்ரயாகம் அதிகாலை முதல் நடைபெற்றது. 

பின்னர் குருநாதசுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. மேலும் சோமவார பூஜையை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் மற்றும் 1008 கலசாபிஷேக பூஜைகள்  நடைபெற்றது. 

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
 நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 

ADVERTISEMENT

Tags : virudhunagar
ADVERTISEMENT
ADVERTISEMENT