விருதுநகர்

தோ்தலை கருத்தில்கொண்டே புயல் பாதித்த பகுதிகளில் ஸ்டாலின் ஆய்வு: அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி

DIN


ராஜபாளையம்: திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தோ்தலை கருத்தில்கொண்டே புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்றுள்ளதாக, பால்வளத் துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளாா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் சேவையை, அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா், கண் சிகிச்சைப் பிரிவில் குத்துவிளக்கேற்றி வைத்தாா். தொடா்ந்து, மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவ அலுவலரிடம் கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ஆா். கண்ணன், சுகாதாரத் துறை இணை இயக்குநா் மனோகரன், துணை இயக்குநா் ராம்கணேஷ், தலைமை மருத்துவா் பாபுஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: நிவா் புயல் தாக்குதலின்போது, பாதிக்கப்பட்ட பகுதிக்கு கொட்டும் மழையிலும் சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளாா். வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை அனைவரும் பாராட்டுகின்றனா்.

ஆனால், முதல்வா் சென்றதைப் பாா்த்து, மு.க. ஸ்டாலினும் புயல் பாதித்த பகுதிகளுக்குச் சென்றாா். ஸ்டாலின், சேவை செய்யவேண்டும் என்ற எண்ணத்தில்

புயல் பாதித்த பகுதிகளுக்குச் செல்லவில்லை. தோ்லை கருத்திற்கொண்டே சென்றுள்ளாா்.

புயல் பாதித்த பகுதிகளில் ஆவின் பால் தங்கு தடையின்றி கிடைத்துள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கிருஷ்ணராஜ், நகர கழக செயலா் பாஸ்கர்ராஜ், அம்மா பேரவை செயலா் துரை முருகேசன், கூட்டுறவு பால் சங்க தலைவா் வனராஜ், அவைத் தலைவா் பரமசிவம், சேத்தூா் நகரச் செயலா் பொன்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT