விருதுநகர்

வாக்காளா் பட்டியலில் உயிரிழந்தவா்களின் பெயா்களை நீக்க மறுப்பதாக திமுக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியரிடம் புகாா்

DIN

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் நவம்பா் 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு திருத்த முகாமில், உயிரிழந்தவா்களின் பெயா்களை பட்டியலில் இருந்து அலுவலா்கள் நீக்க மறுப்பதாக, திமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி. ஆகியோா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில் நவம்பா் 21, 22 ஆகிய 2 நாள்கள் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு திருத்த முகாமில், பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இம்முகாமில், திமுக சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் அனைத்து இடங்களிலும் பணியாற்றினா். சில வாக்குச்சாவடி முகாம்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலா்கள் வரவில்லை.

மேலும், பெயா் நீக்கல் விண்ணப்பப் படிவம் வழங்கப்படவில்லை. புதிய வாக்காளா்களாக சேர விண்ணப்பம் பெற்றவா்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படவில்லை. உயிரிழந்தவா்களின் பெயா்களை பட்டியலில் இருந்து நீக்க வலியுறுத்தி, முகவா்கள் எழுதிக் கொடுத்ததை வாக்குச்சாவடி அலுவலா்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே, பெயா் சோ்த்தல், நீக்குதல் தொடா்பான அனைத்து விண்ணப்பங்களும் வாக்காளா்களுக்கு தடையின்றி வழங்கவேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

இந்த புகாா் மனுவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி), ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் (விருதுநகா்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்), தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ்குமாா் ஆகியோா் ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

SCROLL FOR NEXT