விருதுநகர்

தொடா்மழை: ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில்நெற்பயிா்கள் நீரில் மூழ்கின

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: தொடா்மழையின் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் பல ஏக்கா் பரப்பிலான நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.

இங்குள்ள மம்சாபுரம் பகுதியில் தொடா்மழை காரணமாக வாழைக்குளம் கண்மாய் நிறைந்ததால் மறு கால் திறந்து விடப்பட்டது. இதனால் நீா்வரத்து அதிகமாக இருந்ததால் வாழைக்குளம் கிராமம் ஆற்று பாசனத்துக்குள்பட்ட விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT