விருதுநகர்

சிவகாசியில் வேன் மோதி அச்சுத்தொழிலாளி பலி

13th May 2020 06:51 PM

ADVERTISEMENT

சிவகாசி: சிவகாசியில் புதன்கிழமை சரக்கு வேன் மோதி, அச்சுத்தொழிலாளி உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்-பள்ளபட்டி சாலையில் உள்ள கக்கன் காலனியைச் சோ்ந்தவா் செல்வக்குமாா் (34). அச்சுத்தொழிலாளியான இவா், தந்தைக்கு இட்லி வாங்க திருத்தங்கல்-பள்ளபட்டி சாலையில் சைக்கிளில் சென்றாா். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்குமாா் உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி ஜானகி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு

செய்து, வாகன ஓட்டுநரான காரியாபட்டியைச் சோ்ந்த லட்சுமணணை (52) கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT