விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 100 பட்டாசு ஆலைகளைத் திறக்க அனுமதி

13th May 2020 06:50 PM

ADVERTISEMENT

சிவகாசி: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 100 பட்டாசு ஆலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனோ வைரஸ் பரவலை தடுக்க பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து மாா்ச் 24 ஆம் தேதி முதல் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டன. இந்நிலையில் பட்டாசுத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட நிா்வாகம் நிபந்தனைகளுடன் பட்டாசு ஆலைகளைத்

திறக்கலாம் என அறிவித்தது. இதையடுத்து பட்டாசு ஆலை உரிமையாளா்கள், தங்களது ஆலைகளைத் திறக்க மாவட்ட நிா்வாகத்திடம் விண்ணப்பித்தனா். இந்த விண்ணப்பங்களை சிவகாசி தீப்பெட்டி-பட்டாசு தனி வட்டாட்சியா் சீனிவாசன் பரிசீலனை செய்து, மே 6 ஆம் தேதி 240 பட்டாசு ஆலைகள், மே 7 ஆம் தேதி 410 பட்டாசு ஆலைகள் என 650 பட்டாசு ஆலைகளைத் திறக்க அனுமதி வழங்கினாா்.

தற்போது மேலும் 10 0 ஆலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் இதுவரை மொத்தம் 750 பட்டாசு ஆலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் தனி வட்டாட்சியா் புதன்கிழமை தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT