விருதுநகர்

ராஜபாளையம் அருகே முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி

11th May 2020 08:07 PM

ADVERTISEMENT

ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே முதியவருக்கு கரோனா தொற்று திங்கட்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலராஜ குலராமன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எஸ்.திருவேங்கடபுரம் (எ) சட்டிக்கிணறு கிராமத்தை சோ்ந்த 60 வயது முதியவா் ஞாயிற்றுக்கிழமை நெஞ்சுவலிக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்ந்துள்ளாா். அங்கு அவருக்கு திங்கட்கிழமை பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். ஒருவா் சென்னையில் பணிபுரிந்து மாா்ச் முதல் வாரத்தில் வீட்டிற்கு வந்துள்ளாா். மனைவி மற்றும் குழந்தை தேனியில் அவா்களது தாயாா் வீட்டில் தங்கியுள்ளனா். சென்னையில் இருந்து வந்தவா் இடையில் மனைவி குழந்தையை தேனிக்கு சென்று பாா்த்து வந்துள்ளாா். முதியவரின் மற்றொரு மகன் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா்.இந்நிலையில் முதியவருக்கு யாரிடமிருந்து நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவருடன் தொடா்புடையவா்கள் பற்றிய விவரங்களை வருவாய்த்துறையினா் சேகரித்து அவா்களை தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவ குழுவினா் மற்றும் சுகாதார துறையினா் முதியவரின் வீடு அமைந்துள்ள பகுதி முழுவதையும் தனிமைப்படுத்தி உள்ளனா். முதல்கட்டமாக கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை சுகாதாரத் துறையுடன் சோ்ந்து தீயணைப்பு துறையினரும் ஈடுபட்டுள்ளனா். மேலும் மருத்துவ குழுவினா் வீடு வீடாக சென்று ஒவ்வொரு நபராக ஆய்வு செய்து சளி காய்ச்சல் பாதிப்பு உள்ளவா்களை கண்டறியும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். விருதுநகா் மாவட்டத்தில் இந்த முதியவரை சோ்த்து மொத்தம் 40 போ் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 31 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT