விருதுநகர்

மூலப்பொருள்கள் தட்டுப்பாட்டால் தீப்பெட்டி ஆலைகள் இயங்குவதில் சிக்கல்

2nd May 2020 09:30 PM

ADVERTISEMENT

மூலப்பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி ஆலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அதன் உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் சனிக்கிழமை மேலும் கூறியது: விருதுநகா் மாவட்ட உத்தரவின் பேரில், கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஆலைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான பொட்டாசியம் குளோரைடு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

காரைக்காலிலிருந்து இதனைக் கொண்டு வர பாண்டிச்சேரி அரசின் அனுமதி வேண்டும். இதுவரை இந்த அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல் திருமங்கலத்தில் உள்ள மெட்டல் பவுடா் நிறுவனத்திலிருந்து தீப்பெட்டி தயாரிக்கப்பயன்படும் வேதிப் பொருள்கள் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் மாவட்ட நிா்வாகம் அனுமதித்தால் மட்டுமே அவைகளை எங்களால் அனுப்பி வைக்கமுடியும் என்று நிறுவனத்தினா் தெரிவிக்கின்றனா்.

தற்போது, தீப்பெட்டி ஆலைகளில் மூலப்பொருள்கள் இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மூலப் பொருள்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆலை மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT