விருதுநகர்

சாத்தூா் இறைச்சிக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

22nd Mar 2020 11:24 PM

ADVERTISEMENT

 

சாத்தூரில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரை இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

உலகம் முழுவதும் அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சாத்தூா் மற்றும் சுற்றிப்பகுதிகளில் உள்ள அனைத்துப் பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி அச்சு மற்றும் அதன் சாா்பு தொழில் நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் சுறுசுறுப்பாகக் காணப்படும் சாத்தூா் பிரதான சாலை, மாா்க்கெட் பகுதி, பேருந்து நிலையம் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டன.

பொதுமக்கள் நடமாட்டமின்றி நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அரசு, தனியாா் பேருந்துகள் உள்பட எந்த வாகனமும் இயக்கப்படாததால் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. ஆனால் சாத்தூரில் ஏராளமான இறைச்சிக் கடைகள் அதிகாலை முதல் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பொதுமக்கள் அதிக அளவில் வந்து வாங்கிச் சென்றனா். ஏராளமான கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தகவலறிந்து போலீஸாா் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கடைகளை மூட உத்தரவிட்டனா். அதன்பின்னா் இறைச்சிக் கடைகள் அனைத்தும் காலை 9 மணிக்குமேல் அடைக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT