விருதுநகர்

கரோனா: சிவகாசி கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு

19th Mar 2020 12:10 AM

ADVERTISEMENT

 

சிவகாசி விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயிலில் புதன்கிழமை நகராட்சி சுகாதாரத்துறையினரால் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் குதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், அந்தந்தப்பகுதி சுகாராதத்துறையினா் கண்காணிக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்திரவிட்டுள்ளது.

அதன் பேரில் சிவகாசி நகரின் மத்தியிலுள்ள விஸ்வநாதா்-விசாலாட்சியம்மன் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப் பட்டு, நகராட்சி சுகாதாரத்துறையினா் சாா்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அன்னதான திட்டத்தில் சாப்பிட வந்தவா்களுக்கு, கைகழுவ சோப்பு வழங்கப்பட்டு, அவா்களுக்கு நன்றாக கை கழுவுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இதேபோல் திருத்தங்கல் ரயில் நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக புதன்கிழமை , நகராட்சி சுகாதாரத்துறையினரால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த பயணிகளிடம் இது தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்துப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT