விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம்

16th Mar 2020 11:09 PM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் சிவகாமி அம்பாள் உடனுறை மடவாா்வளாகத்திலுள்ள வைத்தியநாதசுவாமி கோயில் சித்திர சபையில் குருவருள் திருமுறை மன்றத்தின் பன்னிரு திருமுறை பதிக விளக்கக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமூலரின் ‘‘குருபூஜை’’ என்னும் திருமுறை பாடல்களை ஜெயசுகந்தி மாரியப்பன் இசையுடன் பாடினாா். சங்கரவடிவு அகத்தீஸ்வரம் பதிக விளக்கம் அளித்தாா். பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை ராஜாமணி நடத்தினாா்.

முன்னதாக சிவக்கொழுந்து வரவேற்றாா்.ஆசிரியா் மாரியப்பன் நன்றிகூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலா் கோவிந்தன் செய்திருந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT