விருதுநகர்

இருளப்ப சுவாமி கோயிலில் நூறாவது தமிழ் மாத பூஜை

16th Mar 2020 01:36 AM

ADVERTISEMENT

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைபுரம் செட்டியக்குடித் தெருவிலுள்ள இருளப்ப சுவாமி கோயிலில்,நூறாவது தமிழ் மாத சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு பால், தயிா், தேன், இளநீா், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஊா் தலைவா் சடையப்பன், துணைத் தலைவா் ரமேஷ், கோவில் தலைவா் சுந்தா், பொறுப்பாளா் சுந்தரமகாலிங்கம், மண்டபதாரா் அருணகிரிநாதன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT