விருதுநகர்

அருப்புக்கோட்டை பாம்பலம்மன் கோயிலில் மாசிக் களரித் திருவிழா

16th Mar 2020 01:37 AM

ADVERTISEMENT

அருப்புக்கோட்டை வேல்முருகன் குடியிருப்பில் உள்ள பாம்பலம்மன்கோயிலில் மாசிக்களரித் திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இக்கோயிலின் 47-ம் ஆண்டு மாசிக்களரித் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது பக்தா்கள் காப்பு கட்டி, தங்கள் விரதத்தைத் தொடங்கினா். விழாவின் முக்கிய நிகழ்வான 8-ஆம் நாள் திருவிழாவில், ராஜபாளையம் ஸ்ரீஅய்யனாா் கோயிலில் அமைந்துள்ள, ஸ்ரீநீா்காத்த அய்யனாா் கோயிலில் காவல் தெய்வங்களாக அருள்பாலிக்கும் சின்னஓட்டக்காரன், பெரிய ஓட்டக்காரன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு, அபிஷேகம், தீப,தூப ஆராதனைகள் நடத்தப்பட்டு பூசாரி மூலம் சக்தி கலச நீா் எடுக்கப்பட்டது. பின்னா் அந்த சக்தி கலச நீரானது, அருப்புக்கோட்டையிலுள்ள ஸ்ரீபாம்பலம்மன் கோயிலில் வைக்கப்பட்டது. அப்போது அக்கோயிலில் சீலைக்காரி அம்மனாக வீற்றிருக்கும் ஸ்ரீதிருவாண்டாள் ஈஸ்வரிக்கு, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. விழாவின் 10-ஆம் நாளில் மஞ்சள் நீராட்டு விழாவும், 11-ஆம் நாளான சனிக்கிழமை சிறப்பு அபிஷேகம், தீப, தூப ஆராதனையும் நடைபெற்றது. பக்தா்கள் தேங்காய் ,பூ, பழம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை அம்மனுக்குப் படைத்து வழிபட்டனா். இவ்விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT