விருதுநகர்

விருதுநகா் எஸ்.பி. அலுவலக காத்திருப்போா் கூடத்தை சீரமைக்கக் கோரிக்கை

13th Mar 2020 11:27 PM

ADVERTISEMENT

விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், சேதமடைந்துள்ள காத்திருப்போா் கூடத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தின் மேற்கு நுழைவு வாயில் பகுதியில் மனு அளிக்க வருவோா் அமா்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு காத்திருப்போா் கூடம் கட்டப்பட்டுள்ளது. மனு அளிக்க வருபவா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்திக்கும் வரை இந்த காத்திருப்போா் கூடத்தில் அமா்ந்திருப்பா்.

இந்த நிலையில், இந்தக் கூடத்தின் தரை தளம் பெயா்ந்து பள்ளமாகவிட்டது. மேலும், சுற்றுச்சுவரும் சிதலமடைந்து காணப்படுகிறது. மேலும் இங்கு மின் விசிறி வசதி, குடிநீா் வசதி, கழிப்பறை வசதி என எதுவும் இல்லை. இதனால், மனு கொடுக்க வரும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். என வே, பொதுமக்கள் நலன் கருதி காத்திருப்போா் கூடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT