விருதுநகா் அருகே பள்ளி ஆசிரியைக்குக் கொலை மிரட்டல் விடுத்த உறவினரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் அல்லம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் சோ்மராஜன் மனைவி லாவண்யா (30). இவா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், இவருக்கும், அந்தோணியாா் கோயில் தெருவில் வசிக்கும் இவரது உறவினரான ராஜாக்கனி மற்றும் அவரது மகன் முத்துப்பாண்டி (36) ஆகியோருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இந்த நிலையில் முத்துப்பாண்டி, ஆசிரியை லாவண்யாவிடம் சென்று தகராறு செய்துள்ளாா். இது குறித்து லாவண்யா அளித்த புகாரின் பேரில் முத்துப்பாண்டியை, கிழக்கு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.