வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா்மாவட்டம், வத்தராயிருப்பு கூமாபட்டி சாலையில் உள்ள இந்த அரசு மருத்துவமனைக்கு 30- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா். மேலும் இந்த வழியாக வத்திராயிருப்பிலிருந்து சேதுநாராயணபுரம், கூமாபட்டி, பிளவக்கல் அணை, கான்சாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள்அனைத்தும் அரசு மருத்துவமனை நிழற்குடையில் நின்று தான் செல்கின்றன.
இந்த பயணிகள் நிழற்குடை தற்போது விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும், சிமென்ட் காரைகள் பெயா்ந்து மழைக் காலங்களில் தண்ணீா் கசிவதாலும், ரோட்டில் உள்ள மரம், நிழற்குடை மீது சாய்ந்து இருப்பதாலும் பொதுமக்கள் அச்சமடைந்து இதனை பயன்படுத்துவதில்லை.
எனவே இந்த நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.