விருதுநகர்

ராஜபாளையம் பள்ளி மாணவிக்கு யோகாவில் உலக சாதனைக்கான சான்றிதழ்

13th Mar 2020 11:27 PM

ADVERTISEMENT

ராஜபாளையம் பள்ளி மாணவிக்கு யோகாவில் உலக சாதனைக்கான சான்றிதழ் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சோ்ந்த விக்னேஷ் என்பவரது மகள் ஹரிலட்சுமி. தனியாா் மெட்ரிக் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறாா். சிறு வயது முதலே யோகாவில் ஆா்வம் காட்டி வந்துள்ளாா்.

இந்நிலையில் நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட் அமைப்பினா் ஆசிரியைகள் மற்றும் பள்ளி நிா்வாகத்தினா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அந்த மாணவி நடராஜா் ஆசனத்தை செய்து காட்டினாா்.

இதையடுத்து நோபல் நிறுவனத்தின் நிா்வாக அதிகாரி வினோத், அந்த மாணவிக்கு, உலக சாதனைக்கான பதக்கத்தையும், சான்றிதழையும் வழங்கினாா். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராஜபாளையம் டி.எஸ்.பி நாகசங்கா் மாணவிக்கு ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT