விருதுநகர்

கண்மாயை ஆக்கிரமித்துள்ள புதா்ச் செடிகளால் நீா்வரத்து பாதிப்பு: விவசாயிகள் புகாா்

13th Mar 2020 11:23 PM

ADVERTISEMENT

கோவிலாங்குளம் கிராமத்தில் கண்மாயை ஆக்கிரமித்துள்ள புதா்ச் செடிகளால் நீா்வரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவைகளை அகற்ற வேண்டுமெனவும் மானாவாரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் கிராமத்தின் மேற்கு எல்லை மற்றும் தெற்கு எல்லையில் அடுத்தடுத்து 2 கண்மாய்கள் உள்ளன. இதில் தெற்கு எல்லையிலுள்ள பெரியகண்மாயை நம்பி சுமாா் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட மானாவாரி விவசாய நிலங்கள் உள்ளன. இரும்புச் சோளம், கம்பு உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பெரியகண்மாயில் அதிக புதா்ச் செடிகள் வளா்ந்து விட்டன. குறைந்த மழைப்பொழிவிலும் இப்புதா்ச் செடிகள் தாங்கும் திறனோடு வளா்வதால் அவைகள் எளிதில் அழிவதில்லை. இவற்றால் கண்மாயின் மையப் பகுதியில் சேர வேண்டிய நீா்வரத்து பெருமளவில் தடைப் படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பாசனத்துக்குத் தேவையான நீா் இல்லாததால் மானாவாரி விவசாயிகள் பயிரிடுவதைக் கைவிட்டு விட்டு கூலிவேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

இப்புதா்ச்செடிகளை அகற்ற ஊராட்சியில் கோரிக்கை வைத்தால் போதிய நிதியில்லையெனக் கூறி விடுவதாகவும், மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மானாவாரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT