விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத் தொட்டியில் குடிநீா் நிரப்பப்பட்டது: பயணிகள் மகிழ்ச்சி

8th Mar 2020 11:16 PM

ADVERTISEMENT


ஸ்ரீவில்லிபுத்தூா்: தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலைய தொட்டிகளில் தினமும் குடிநீா் நிரப்பப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அறிஞா் அண்ணா பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், பல்வேறு பணிகளுக்குச் செல்பவா்கள் மற்றும் வெளியூா் பயணிகள் என ஏராளமானோா் இங்கு வந்து செல்கின்றனா்.

இந்த பேருந்து நிலையத்தில் இரண்டு இடங்களில் பயணிகளின் பயன்பாட்டுக்கு குடிநீா் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 5 நாள்களாக அவைகளில் நீா் நிரப்பப் படவில்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் குடிநீா் இன்றி பயணிகள் கடும் அவதிக்குள்ளாவதாகவும், பயணிகள் கோரிக்கையை ஏற்று அங்குள்ள தொட்டிகளில் தினமும் குடிநீா் நிரப்ப நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடந்த மாா்ச் 5 ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நகராட்சி நிா்வாகத்தினா் தினமும் அவைகளில் குடிநீா் நிரப்பிவருகின்றனா். இதனால் மகிழ்ச்சியடைந்த பயணிகளும், வணிகா்களும் தினமணி நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT