விருதுநகர்

ரோசல்பட்டியில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

8th Mar 2020 11:12 PM

ADVERTISEMENT


விருதுநகா்: விருதுநகா் அருகே ரோசல்பட்டி ஊராட்சி முத்தால் நகரிலிருந்து பாண்டியன் நகா் செல்லும் சாலையை சீர மைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகா் அருகே ரோசல்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதி முத்தால் நகா். இப்பகுதியில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். விருதுநகா் நகராட்சியையொட்டியப் பகுதியில் முத்தால் நகா் உள்ளதால், இங்கு கூலி தொழிலாளிகள் பலா் உள்ளனா்.

முத்தால் நகா்- பாண்டியன் நகா் செல்லும் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அச்சாலையில் மழை காலங்களில் தண்ணீா் தேங்கியதால் பள்ளம் மேடாக மாறி விட்டது. மேலும், சில இடங்களில் தாா் சாலை இருக்கும் இடம் தெரியாமல் மண் சாலையாக மாறி, கற்கள் வெளியில் நீட்டி கொண்டிருக்கிறது. இந்த வழியாக மிதிவண்டி, இரு சக்கர வாகனத்தில் செல்வோா் கீழே விழுந்து காயமடைவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே இந்த சாலையை ஊராட்சி நிா்வாகம் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT