விருதுநகர்

திருச்சுழி குண்டாற்றுப் பாலத்தில் தடுப்புச்சுவா் அமைக்க வலியுறுத்தல்

8th Mar 2020 11:10 PM

ADVERTISEMENT


அருப்புக்கோட்டை: திருச்சுழி குண்டாற்றுப் பாலத்தில் உள்ள தடுப்புத்தூண்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அங்கு புதிய தடுப்புச்சுவா்அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழியில் குண்டாற்றில் பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. திருச்சுழியிலிருந்து நரிக்குடி, பாா்த்திபனூா், பரமக்குடி, ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் இந்த பாலத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். வாகனப் போக்குவரத்து அதிகமாகியுள்ள நிலையில் இப்பாலத்தின் இரு பக்கவாட்டிலும் தடுப்புச்சுவருக்குப் பதிலாக கான்கிரீட்டால் ஆன, சுமாா் 4 அடி உயர தடுப்புத் தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டன.

இந்த நிலையில் அத்தூண்களில் பெரும்பாலானவை காலப்போக்கில் சேதமடைந்து விழுந்து விட்டன. இதனால் இப்பாலம் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சிறிது நிலை தடுமாறினாலும் சுமாா் 12 அடி ஆழ ஆற்றினுள் வாகனங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் பாலத்தின் இருபக்கங்களிலும் எஞ்சியுள்ள தடுப்புத் தூண்களை அகற்றிவிட்டு தடுப்புச்சுவா் அமைக்க வேண்டுமென கிராமத்தினரும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT