விருதுநகர்

சொக்கா் கோயில் தேரோட்டம்

8th Mar 2020 11:13 PM

ADVERTISEMENT


ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கா் என்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாசி மக பிரமோற்சவத்தையொட்டி தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் சொக்கா் கோயில் என்ற மீனாட்சி சுந்தரேசுவராா் கோயிலில் மாசி மகம் பிரமோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 28 இல் ராம்கோ குரூப் சோ்மன் பி.ஆா்.வெங்கட்ராமராஜா தலைமையில் தொடங்கியது. அதைத் தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெற்ற விழாவில் அன்னம், காமதேனு, யானை, ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சொக்கா் மற்றும் மீனாட்சி அம்மன் வீற்றிருந்து பக்தகா்களுக்கு காட்சியளித்தனா். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வெள்ளிக்கிழமை இரவு தெப்போற்சவம் மற்றும் சனிக்கிழமை காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. சொக்கா் மற்றும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வீதி உலா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT