விருதுநகர்

சிற்றுந்துகளால் சாத்தூரில் போக்குவரத்து இடையூறு

8th Mar 2020 11:16 PM

ADVERTISEMENT


சாத்தூா்: சாத்தூரில் போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்தும் சிற்றுந்துகள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து, படந்தால், சத்திரபட்டி, சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, வெங்கடாசலபுரம், ராமலிங்காபுரம், அம்மாபட்டி, சந்தையூா் ஆகிய பகுதிகளுக்கு 7-க்கும் மேற்பட்ட சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவைகளுக்கென விதிக்கபட்ட நிறுத்தங்களில் நிறுத்தாமல், ஓட்டுநா்கள் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்துவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.

மேலும் ஏராளமான அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், கடைகள், வணிக வாளகங்கள் உள்ள பிரதான சாலைகளில் இந்த சிற்றுந்துகளால் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையை, இந்த மினிபேருந்துகள் உருவாக்குகின்றன என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே பொதுமக்கள், பயணிகளின் நலன் கருதி போக்குவரத்து போலீஸாா் முறையான நடவடிக்கை எடுத்து மினிபேருந்து ஓட்டுநா்களுக்கு எச்சரிக்கை விடுத்து இதுபோன்ற இடையூறுகளைத் தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT