விருதுநகர்

சாத்தூா், ஏழாயிரம் பண்ணையில் நாய்கள் தொல்லை

8th Mar 2020 11:17 PM

ADVERTISEMENT


சாத்தூா்: சாத்தூா், ஏழாயிரம் பண்ணைப் பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.

வெம்பக்கோட்டை அருகே ஏழாயிரம்பண்ணை, பழைய ஏழாயிரம் பண்ணை, ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள வடக்கு தெரு, தெற்கு தெரு, ராஜீவ்நகா், அரண்மனை தெரு பிரதான சாலை ஆகிய பகுதியில் அதிகளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால் பொதுமக்கள், பெண்கள் அச்சத்துடனேயே சாலையில் செல்கின்றனா். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா்களையும் அவைகள் துரத்துவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. தெருநாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

சாத்தூா் பகுதியில்...

இதே போன்று சாத்தூா் நகராட்சிகுள்பட்ட அண்ணாநகா், குருலிங்காபுரம், படந்தால், மாரியம்மன் கோயில், முருகன் கோயில், பிள்ளையாா் கோயில் தெரு, ரயில்வே பீடா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நாய்கள் சுற்றி திரிகின்றன.

ADVERTISEMENT

இதுகுறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா். எனவே நகராட்சி நிா்வாகத்தினா் நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT